ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு ‘சூரரைப் போற்று’ தேர்வு
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு சூர்யாவின் சூரரைப் போற்று படம் தேர்வாகியுள்ளது.
சென்னை, ஜன-26

நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா பொது முடக்கம் காரணமாக நீண்ட தாமதத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு, ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை பெருமளவில் பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு இந்தப் படம் தேர்வாகியுள்ளது. ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.இந்த செய்தியைத் தொடர்ந்து, சூரரைப் போற்று ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.