தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு..!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜன-26

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் (கலெக்டர்களுக்கும்) அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகளை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் உங்கள் பார்வைக்கு (கலெக்டர்கள்) தெரியப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அந்தந்த பகுதியில் உள்ள துணை கலெக்டர்கள், உதவி கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக அந்தந்த பகுதியில் உள்ள தாசில்தார், சிறப்பு தாசில்தார் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சிக்கு பகுதிகளுக்கு துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய தகவல்கள், தமிழக அரசின் அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.