தேவர் ஜெயந்தி: முதல்வர், துணை முதல்வர் மரியாதை…

பசும்பொன், அக்டோபர்-30

முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 112 வது ஜெயந்தி விழா மற்றும் 57 வது குருபூஜை நடைபெற்று வருகிறது. இதையொட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோன்று, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த காலத்தில் செய்த சேவை, மக்கள் மனதில் குடி கொண்டிருப்பதாக கூறினார். குருபூஜை தினத்தை அரசு விழாவாக அறிவித்தது, தங்கக் கவசம் கொடுத்தது போன்றவற்றை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், முத்துராமலிங்கத் தேவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *