சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி.. சிறைத்துறை தகவல்

ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதி என கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு, ஜன-25

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலாவின் தண்டனைக் காலம் முடிந்து அவர் நாளை மறுநாள்(ஜன.27) விடுதலை ஆகவிருக்கிறார்.

இதனிடையே சில நாள்களுக்கு முன்னதாக சசிகலாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

சசிகலாவின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்தது. உடல்நிலை சீராக இருப்பதால், ஐசியு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிகலா வருகிற 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதி என கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளை விடுமுறை நாள் என்பதால் சசிகலா விடுதலை தொடர்பாக ஆவணப் பணிகள் இன்றே முடிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *