2 மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்த தம்பதி.. ஆந்திராவில் வெறிச்செயல்..!

சித்தூர், ஜன-25

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரது மனைவி பத்மஜா. தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக உள்ளார். இவர்களது மகள்கள் அலேக்யா, சாயி திவ்யா. இதில் அலேக்யா மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். சாயி திவ்யா பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான இசை கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட புருஷோத்தமன், பத்மஜா தம்பதிகளுக்கு யாரோ ஒரு பூசாரி அறிமுகமானதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனைப்படி செய்தால் வீட்டில் அதிசயங்கள் நடக்கும் என தெரிவித்தாராம். இதை நம்பி பேராசிரியர் தம்பதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்து பூஜைகள் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்திய போது, புருஷோத்தமன், பத்மஜா இருவரும், ‘நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2மகள்களும் மீண்டும் உயிர்பித்து விடுவார்கள்’ என தெரிவித்தனர். இதையடுத்து பூஜையறையில் நிர்வாண நிலையில் இருந்த 2 மாணவிகளின் சடலங்களை மீட்டு பேராசிரியர் தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *