சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதில் அதிமுக சமரசம் செய்யாது… S.P.வேலுமணி உறுதி
கோவை, ஜன-24

கோவை போத்தனூரில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.அப்துல் ஜப்பார் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-
சிறுபான்மையினர் பாதுகாப்பு விஷயத்தில் எங்களுடைய நிலைப்பாட்டை முதல்வர் பழனிசாமி, பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். எங்களுடைய கொள்கை, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்டது. சிறுபான்மையினர் பாதுகாப்பில் நாங்கள் ஒரு இன்ச் அளவும் மாறமாட்டோம். இதைச் சொன்னது போலவே செய்து காட்டி வருபவர், முதல்வர் பழனிசாமி. நமது கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதைச் சுட்டிக்காட்டி, சிறுபான்மையினர் பாதுகாப்பில் நாங்கள் எப்போதும் விலகமாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்.’2 ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய சாதிக்பாட்சாவின் மனைவியை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதிலிருந்த அவரைக் காப்பாற்றி இன்று வரை அவரைப் பாதுகாக்கவும் முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.