சசிகலா உணவு எடுத்துக்கொள்கிறார், எழுந்து நடக்கிறார்.. மருத்துவமனை தகவல்

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு, ஜன-24

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. சுயநினைவுடன் இருக்கிறார். அவர் உணவை இயல்பாக எடுத்துக்கொள்கிறார். உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடக்கிறார். வழக்கமாக கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *