இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ரெடி.. ஆனால் 2 சீட்டு வேணும் – கருணாஸ்
சட்டமன்ற தேர்தலில் 2 சீட்டுகள் கேட்க உள்ளோம். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் என எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.
திருப்பூர், ஜன-24

திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல , அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது.
ஆனால், வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறோம். தேர்தலில் அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்கவுள்ளோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் தயாராகவுள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார்.