ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெம்பும் தைரியமும் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை, ஜன-24

சென்னை ராயபுரத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, “கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுகவின் தவறு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில்தான் திமுகதான் போட்டியிடும். ராயபுரத்தில் திமுக வெற்றி பெறும்” என்று பேசியிருந்தார்.

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் 1991 முதல் 2016 வரை ஐந்து முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இத்தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராயபுரத்தில் திமுக போட்டியிடும் என்று பேசிய ஆர்.எஸ். பாரதியின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெம்பும் தைரியமும் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும். ராயபுரத்தில் 5 முறை என்னை வெற்றி பெற மைத்த மக்கள், 6வது முறையாகவும் தேர்வு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *