திருத்தணியில் வேலை கையில் எடுத்த மு.க.ஸ்டாலின்..!

திருத்தணி, ஜன-24

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் திருத்தணி முருகனின் பெயரில் வெள்ளி வேல் ஒன்றை திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். முருகனின் ஆறு படை வீடுகளில் 5-வது வீடான திருத்தணியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பாஜக சார்பில் வேல்யாத்திரை நடத்தப்பட்டது. இந்த வேல் யாத்திரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது திமுக தலைவருக்கே வேல் பரிசாக கொடுக்கப்பட்டது திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும இந்து கடவுளை விமர்சித்து வரும் நிலையில், திமுக தலைவருக்கு வேல் பரிசளிக்கப்பட்டது வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் முயற்சியா என்பது குறித்து பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டது தொடர்பாக ட்விட்டரில் பலவிதமான கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

இந்துக்களுக்கு திமுகவும் திமுகவினரும் எதிரி அல்ல என்பதை பறைசாற்றும் வகையில் ஸ்டாலினின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *