காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஜன-22

காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிப்பது, உட்கட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், குடியரசுதினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டர் பேரணி, மாநில சட்டசபை தேர்தல்கள், காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *