புதுவையில் ஆழ்குழாய் கிணறுகளை மூட உத்தரவு
புதுச்சேரி.அக்டோபர்.29
புதுவை மாநிலத்தில் மூடப்படாத நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுஜித் இழப்பு சோகத்தை ஏற்படுத்திய நாளாக உள்ளது. எனது சார்பிலும் புதுவை மக்களின் சார்பிலும் சுஜித் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுவையிலும் மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள் ஒரு சில இடங்களில் உள்ளதாக எனது கவனத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளை அழைத்து அந்த ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளை அழைத்து பேச உள்ளதாக நாராயணசாமி கூறினார்.