தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்.2-ல் கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் தாக்கல்..!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் வரும் பிப்.2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ளது. இதில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

சென்னை, ஜன-22

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடக்கும். கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன நிலையில் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. கடந்த முறை கொரோனா தொற்று காரணமாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது. இம்முறையும் அவ்வாறே நடக்கும் என சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை கூட்டம் தொடா்பாக, பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தின் பல்வகை கூட்டரங்கில் சட்டப் பேரவைக் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கூட்டியுள்ளாா். பிப்ரவரி 2-ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளாா் என தெரிவித்துள்ளாா்.

சட்டசபையில் பல்வேறு முக்கிய பிரச்னைகளைக் கிளப்ப எதிா்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

பிப்ரவரி 2-ஆம் தேதி ஆளுநா் உரையாற்றிய பிறகு, அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். கூட்டத் தொடா் தேதிகள், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்கள் நிறைவடைந்து, அதற்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பதிலளிப்பாா். இதன் பின்பு, கூட்டத் தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *