கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த கிராமத்தில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு

சேலம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த கிராமத்துக்குத் திரும்பினார். அவருக்குப் பொதுமக்கள் செண்டை மேளம் முழங்க, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சேலம், ஜன-22

ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகம் ஆன டி நடராஜன் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. டி நடராஜன் மாலை சொந்த ஊரான சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பினார்.

அப்போது செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலமாக அவரை வரவேற்றனர். முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் அவரை வரவேற்க தடைவிதிக்கப்பட்டது. கைக்குலுக்குவதற்கும், சால்வை அணிவிப்பதற்கும் தடைவிதித்தது. மேலும், 14 நட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வரவேற்பு விழா நடத்த அமைக்கப்பட்டிருந்த மேடையையும் அகற்றியது.

Salem: Indian left-arm pacer T Natarajan receives a grand welcome by his villagers, at Chinnappampatti in Salem district, Thursday, Jan. 21, 2021. (PTI Photo)(PTI01_21_2021_000167B)

இதனையடுத்து, கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தேசியக் கொடியைப் போர்த்தி, மாலை அணிவித்து ஊர் மக்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்தனர். தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய காரணத்தால் கிரிக்கெட் வீரர் நடராஜன், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, பாராட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *