வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டொனால்டு டிரம்ப்..!

அமெரிக்க அதிபருக்கான வெள்ளை மாளிகையில் இருந்து தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.

வாஷிங்டன், ஜன-20

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.
அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நாளை குடியேற உள்ளார்.

அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த டிரம்ப், அதனை எதிர்த்து நடத்திய சட்டப் போராட்டங்களில் உரிய பலன் கிடைக்கவில்லை. அதன் உச்சகட்டமாக ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ முடிவினை அறிவிக்கும் நாளில் அவரது ஆதரவாளர்கள் ‘கேபிடல் அரங்கில்’ நடத்திய வன்முறை நிரம்பிய போராட்டக் கட்சிகள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின. நான்கு பேர் இதில் உயிரிழந்தனர். பின்னர் ஒருவழியாக டிரம்ப் தனது தோல்வியை ஏற்றார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் வீடாக செயல்பட்டு வந்த வெள்ளைமாளிகையில் இருந்து தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெளியேறினார். அவர் வெளியேறிய போது அவருக்கு குண்டுகள் முழங்க சிவப்புக் கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *