அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்.. புதுச்சேரியில் கூட்டணியுடன் சேர்ந்துதான் வெற்றி என விளக்கம்..!

புதுச்சேரியில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதுதான் அர்த்தம் என ஜெகத்ரட்சகன் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

புதுச்சேரி, ஜன-20

புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மரப்பாலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைமையில் ஆட்சி அமைத்து, கறுப்பு, சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி. இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் ஸ்டாலினிடம் சொல்ல இருக்கிறேன். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுத் தந்தால்தான் நான் இங்கே வருவேன். இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக ஜெகத்ரட்சகன் விளக்கமளித்துள்ளார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என புதுச்சேரியில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று, திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் அர்த்தம். யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். புதுச்சேரியில் திமுக தலைமையில் ஏற்கெனவே 4 முறை ஆட்சி அமைந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக இருண்ட ஆட்சிதான் நடைபெற்றுள்ளது. புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் எதுவுமில்லை. பல தொழிற்சாலைகள், நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் திமுக தலைமையிடம் உள்ளது. வரும் தேர்தலில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கூட்டணியில் யார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திமுக போட்டியிடுவதாக நினைத்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *