மூடாத ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிக்க உத்தரவு
சென்னை.அக்டோபர்.29
பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து
தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தின் பொறியாளர்களுக்கு அதன் மேலாண்மை
இயக்குநர் மகேஸ்வரன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
குடிநீர் வாரிய பொறியாளர்கள், 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைக்க மாற்ற வேண்டும். கட்டமைப்பாக மாற்ற தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களும் இந்த நடவடிக்கைக்கு உதவலாம். மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய சந்தேகம் இருந்தால் 9445802145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், https://www.twadboard.tn.gov.in/ என்ற இணையதளத்திலோ, சமூக வலைதளங்களிலோ விளக்கங்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.