இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைவு
டெல்லி, ஜன-20

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,823 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,05,95,660ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை ஒரு கோடியே 1,02,45,741 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 16,988 குணமடைந்துள்னர்.
கொரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,97,201 ஆகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 162 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,52,718 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் விகிதம் 96.66% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.90% ஆக குறைந்துள்ளது.