அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

வரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, ஜன-19

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து அதே 27-ம் தேதி தான் விடுதலையாக உள்ளார்.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்மந்திரியுமான ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணைஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல், ஜெயலலிதா நினைவிட திறப்பு, சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *