கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, ஜன-19

தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், எந்தவித அறிகுறியும் இல்லாமல் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜரை மாற்ற திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.