ஜெயலலிதா நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜன.27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினாவில் ஜன.27- ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் திறந்துவைக்கிறார்.

சென்னை, ஜன-19

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை 27.1.2021 புதன்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றுத் திறந்து வைக்க உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *