சவுதி அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரியாத் அக்டோபர்.29
சவுதி அரேபியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டு வேளாண் அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத், அழைப்பின் பேரில் பிரதமர் மோடி , அந்நாட்டிற்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்க சவுதி அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சுற்று பயணத்தில், மின்சாரம், நிதி, இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, அங்கு நடைபெறும், முதலீட்டாளர் மாநாட்டிலும் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார்.

முன்னதாக ரியாத்தில் சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சர் அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மொசென் அல்-பாட்லியை மோடி சந்தித்தார். அதைதொடர்ந்து எரிசக்தி அமைச்சர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் அல் சவுத்தையும் சந்தித்தார்.