ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி.. இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ..!

பிரிஸ்பேன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என கைப்பற்றிய இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மும்பை, ஜன-19

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

இந்த வெற்றிக்குக்காக இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *