தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அக்கிரம, அநியாய ஆட்சி.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்
தருமபுரி, ஜன-18

தருமபுரி மாவட்டம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தூள்செட்டி ஏரி கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தியவர் கருணாநிதி. பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சீரமைக்கப்படும் என ஸ்டாலின் கூறினார். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி நீர் வராத இடங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடி நீர் கொண்டு சேர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் சுய உதவி குழு திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் தான் என கூறினார். மகளிர் சுய உதவி குழுவை அதிமுக அரசு முடக்கிவிட்டது என ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அக்கரம, அநியாய ஆட்சி நடைபெற்று வருகிறது என கூறினார். தமிழக மக்களை பற்றி அதிமுக ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை என பேசினார். தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையோடு கூறினார்.