பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் ஆரி.. எவ்வளவு ஓட்டு வாங்கினார் தெரியுமா?

கடந்த 100 நாள்களுக்கும் மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சென்னை, ஜன-18

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டீவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். கடந்த 100 நாள்களாக இந்தப் போட்டியில் பங்கேற்று வந்த ஆரி அர்ஜூனன், பாலாஜி முருகதாஸ், ரியோராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் சோம் சுந்தர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். தொடர்ச்சியாக 6 மணி நேரம் வெளியான இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றதன் அடிப்படையில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலாஜி முருகன், ரியோராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் சோம்சேகர் ஆகியோர் வெற்றி வரிசையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதில் ஆரி அர்ஜூனனுக்கு பிக்பாஸ் ட்ராஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

அதிகாரபூர்வ தகவலாக 16 கோடிக்கும் அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராகி இருக்கிறார் நடிகர் ஆரி.

அப்போது பேசிய ஆரி தான் இரண்டு பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என விரும்புவதாக கூறினார். அது மட்டுமின்றி இரண்டு பேரிடம் ஆசீர்வாதம் பெற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

“என்னுடைய contestants, அவர்களுடன் கருத்து மோதல் நான் செய்ததால் தான் மக்கள் இந்த இடத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். என் பேச்சு, செயல், உடல்மொழி ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தால், உங்களிடமும் குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஓட்டு போட்ட மக்கள்- உங்களையும் நான் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என ஆரி கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

நான் ஸ்கூலில் 5ம் வகுப்பு படிக்கும் வரை மட்டுமே முதல் ரேங்க் என்பதை பார்த்தேன். வேறு எங்குமே முதலிடம் எனக்கு கிடைத்ததே இல்லை. எல்லா இடங்களிலும் அவமானங்கள், அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. வெற்றி வரும் போது அதை பகிர்ந்துகொள்ள அப்பா மற்றும் அம்மா வேண்டும். அவர்கள் என்னிடம் தற்போது இல்லை. ஆனால் அது இரண்டாகவும் நீங்கள் (கமல்) இருக்கிறீர்கள். உங்களிடம் ஆசீர்வாதம் வேண்டும்.

மேலும் நான் எங்கேயோ சரியாக இருக்கிறேன் என எனக்கு தொடர்ந்து ஓட்டு போட்ட மக்கள் ஆகியோரிடமும் நான் ஆசீர்வாதம் வாங்கி கொள்கிறேன் என ஆரி தெரிவித்தார். அதன் பின் கமல் பிக் பாஸ் 4 கோப்பையை ஆரிக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *