தமிழகத்தில் புதிதாக 589 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜன-17

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 770 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,12,568 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,264 ஆக உயர்ந்துள்ளது.
  • அரசு மருத்துவமனையில் 2; தனியார் மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 164 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,29,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,52,29,307 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52,213 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 5,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *