கோவையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் S.P.வேலுமணி தொடங்கி வைத்தார்..!
கோவையில் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை, ஜன-16

நாடு முழுவதும் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கியது. அதன்படி, கோவையில் அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.
முதல் நபராக அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் வி.பூமா கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தொடர்ந்து 34 மருத்துவர்கள், 37 மருத்துவ மாணவர்கள் உள்பட 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.