துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர், ஜன-16

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு, கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல்விஷாரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றார். தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
துரைமுருகனுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வாயு பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரியவந்ததுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.