பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு.. 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்..!

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது.

மதுரை, ஜன-15

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றது.

இன்று 15-ந்தேதி மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றன. பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை சீறிப்பாய்ந்தது.

மாலை 5 மணி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 674 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 18 காளைகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்தி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

17 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 2-வது இடத்தை பிடித்தார். 10 காளைகளை பிடித்த மேட்டுப்பட்டி கார்த்திக் 3-வது இடம் பிடித்தார்.

சிறந்த காளையாக பாலமேடு யாதவர் உறவின்முறை காளை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற காளைக்கு காங்கேயம் பசு மாடு, கன்றுடன் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கருப்பாயூரணி கார்த்தி கூறுகையில் ‘ இது எனது வெற்றி அல்ல, நம் எல்லோருடைய வெற்றி என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *