காசு கொடுத்து பெண்ணிடம் ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல்.. ஆப்பு வைத்த போலீஸ்

சென்னையில் ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீசார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக யூடியூப் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை, ஜன-15

பெசன்ட் நகர் கடற்கரையில் சமீபத்தில் சென்னை டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்தது. இந்நிலையில் அந்த சேனலுக்கு பேட்டி கொடுத்த இளம் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த யூடியூப் சேனலின் தொகுப்பாளர், கேமராமேன் மற்றும் உரிமையாளர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களது யூடியூப் சேனலுக்கு ஆபாசமாக பேட்டி கொடுக்க அந்த யூடியுப் சேனல் தனக்கு பணம் வழங்கியதாக அந்த பெண் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். திட்டமிட்டு தங்கள் யூடியூப் சேனலுக்கு பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த யூடியூப் சேனல் தவறான வழிமுறையை கடைபிடித்தது அம்பலமானது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர ஆணையர், சென்னையில் ஆபாசமாக பேட்டி எடுக்கும் யூடியூப் சேனல்களை எச்சரித்ததுடன். இதுபோன்ற ஆபாச மட்டும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக பெண்ணை ஆபாசப் பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் என்ற அந்த யூட்யூப் நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. அடையாறு காவல் துறை ஆணையர் விக்ரமன் வைத்த கோரிக்கையை ஏற்று யூடியூப் நிறுவனம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *