தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு.. இன்று புதிதாக 621 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜன-15

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 805 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,11,023 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,251 ஆக உயர்ந்துள்ளது.
  • அரசு மருத்துவமனையில் 2; தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 180 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 228746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,51,24,787 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 55,847 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 6,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,01,437 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 389 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,28,102 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 232 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *