பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கியது..!

பாலமேடு, ஜன-15

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத்தொடர்ந்து பாரம்பரியமிக்க பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட்டது. போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு களத்தில் உள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்புக்காக அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உடன் வரும் உதவியாளா்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *