சுஜித் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
ஆழ்துளையில் சிக்கி உயிரிழந்த சுஜித் மறைவையொட்டி
ராகுல் காந்தி,தெலங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன்,பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மணப்பாறையை அடுத்த நடுகாட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது சுஜித் உயிரிழந்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிறுவனின் மறைவையொட்டி காங்கிரஸ் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். ,”குழந்தை சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். குழந்தை சுஜித்தின் இழப்பால் வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சுஐித் மரணம்.. வேதனை அளிக்கிறது.. இருந்து உலகிற்கு பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான் கண்ணீர் அஞ்சலி” என்று தமிழிசை செளந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
சுஜித் மறைவு குறித்து பா.ம.க நிறுவனர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

82 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுர்ஜிர்த்தை உயிருடன் மீட்க முடியவில்லை;குழந்தை இறந்து விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.