திமுகவை எதிர்க்க சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கணும்… ஆடிட்டர் குருமூர்த்தி பரபர அட்வைஸ்

திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுகவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, ஜன-15

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் அப்பத்திரிக்கையின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-

தமிழகத்தில் சாதி கட்சிகள் உருவாக திராவிடமே காரணம். குறிப்பாக பிராமண எதிர்ப்புதான் ஜாதி கட்சி உருவாகவே காரணம். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியை அடையும்.
முதல்வர் பழனிசாமிக்கு ஆளுமை உள்ளது; அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது. யார் தேசியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் தற்போது உள்ளது. திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *