சொந்த ஊரில் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!
சேலம், ஜன-14

உழவர் திருநளையொட்டி முதல்வா் எடப்பாடி பழனிசாமி , தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், கமாலாபுரம் சென்ற அவர் அங்கிருந்து சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு வருகை புரிந்தார். அவரது வீட்டின் அருகே உள்ள முருகன் கோயில் திடலில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
இதனை அடுத்து தனது பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள தொழிலாளா்களுடன் பொங்கல் விழாவை முதல்வர் கொண்டாடினார். பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை கண்ட முதல்வர் பழனிசாமி மக்களை சந்தித்து உரையாடினார்.