சுஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது:விஜயபாஸ்கர்

 திருச்சி.அக்டோபர்.29

உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 நடுகாட்டுபட்டி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுஜித்வில்சன் மீட்பு நடவடிக்கையை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கேயே முகாமிட்டு கவணித்துவந்தார்.

 80 மணி நேரத்திற்கு பின்னர் சிறுவன் உடல் மீட்கபட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

 நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது.

எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை.

கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை.

மருத்துமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது.

எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது.

மனதை தேற்றி கொள்கிறேன். ஏன் என்றால்*
இனி நீ கடவுளின் குழந்தை….

சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்..

டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்று தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *