சுஜித் மீட்பு பணியில் அரசு மெத்தனம்:ஸ்டாலின்

சுஜித் மீட்பு பணியில் அரசு மெத்தனம்:ஸ்டாலின்

திருச்சி.அக்டோபர்.29

 ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித் மீட்பு பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடுகாட்டுப்பட்டியில்  ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த 2 வயது குழந்தை சுஜித் உடல் இன்று அதிகாலை  மீட்கபட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  சுஜித் நல்லடக்கம் செய்யப்பட்ட பாத்திமாபுதூரில் கல்லறைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் குழந்தை சுஜித்தின் பெற்றோர் ஆரோக்கியதாஸ்,கலாமேரி ஆகியோரை சந்தித்த ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சிறுவன் சுஜித்தை  மீட்க 80 மணி நேரம் எடுத்துக்கொண்டது அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது. எந்த இடத்தில் பாறை இருக்கிறது,கடினப்பாறையா? மண் எந்த நிலையில் உள்ளது என்பது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தெரியும்.

அமைச்சர்கள்,அதிகாரிகள், பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்பு பணியில் காட்டவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மீட்பு பணிக்கு  மத்தியபடை மற்றும் ராணுவத்தினரை ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இனியும் இதுபோன்ற துயரம் நிகழக்  கூடாது  எனபதற்காகவே இதைக் கூறுகிறேன் என்று தெரிவித்தார். அவருடன் திருச்சி சிவா,கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி எம்.பி ஆகியோரும் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *