ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி, ஜன-12

தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் 24 மணி நேரத்தில் அதிராம்பட்டினத்தில் 13.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஜனவரியில் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் நல்ல மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.