ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி..!
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
சென்னை, ஜன-11

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
“திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.1.2021) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார். அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, சட்டதிட்டத் திருத்தக் குழுச் செயலாளர் பி.வில்சன், வழக்கறிஞர் விக்டர் ஆகியோர் உடனிருந்தனர்”.
இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.