கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவில் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ள நிலையில் மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

டெல்லி, ஜன-11

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய மருத்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது. இதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் 16-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல்மந்திரிகளும் பங்கேற்றுள்ளனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *