சசிகலா பற்றி சர்ச்சை பேச்சு.. என்னை அப்படி வளர்க்கல – வருத்தம் தெரிவித்த உதயநிதி..!!

சசிகலா பற்றிய சர்ச்சைப்பேச்சு உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜன-11

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசுகையில், ’எடப்பாடி இல்ல அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு; விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு’என்று கூறினார். உதயநிதியின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு டி.டி.வி.தினகரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “நான் பெண்களை தவறாக பேசவில்லை; நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; யார் மூலமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டத் துறை சார்பில் மாநாடு மற்றும் சட்டக் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி துவக்கி வைத்தார். அப்போது, பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் நான் பல்வேறு பொய்யான அவதூறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறேன். திமுக வழக்கறிஞர்கள் என்னை காப்பாற்றுவார்கள் என நம்பி தான் நான் பல இடங்களில் சவால் விட்டு வருகிறேன். பெண்களை நான் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கோர முடியாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியும் எனது தந்தை மு.க.ஸ்டாலினும் என்னை அவ்வாறு வளர்க்கவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *