உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே: குடியரசுத்தலைவர் ஒப்புதல்
டெல்லி.அக்டோபர்.29
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமிக்க வேண்டும் என்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரையை குடியரசுத்தலைவர் ஏற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின்
தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிக்காலம் வரும் நவம்பர்17 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமிக்க வேண்டும் என, ரஞ்சன் கோகோய், பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து நவம்பர்18 ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 47 வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவி ஏற்றுக் கொள்கிறார். அவர் 2021 ஏப்ரல் 23 வரை பதவியில் நீடிப்பார்.