மீண்டும் அரசியலில் குதித்த தமிழருவி மணியன்..! இறக்கும்வரை நோ அரசியல் என்ற நிலையில் பல்டி..!!
காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் மீண்டும் பணி செய்யவுள்ளார்.
கோவை, ஜன-11

இது தொடா்பாக அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பா.குமரய்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை, கவுண்டம்பாளையத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் கலந்து கொண்டாா். இக்கூட்டத்தில் 37 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனா். அவா்கள் கேட்டுக் கொண்டதால் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து பின்னா் உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சி தொடங்க இயலவில்லை என கடந்த டிசம்பா் 29ஆம் தேதி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து நிரந்தரமாக விடைபெறுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினி பின்வாங்கிய பிறகு இனி இறக்கும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என சொன்ன தமிழருவி மணியன் மீண்டும் தனது இயக்கப் பணிகளை தொடங்கியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.