தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல… பாஜகவை போட்டு தாக்கிய கே.பி.முனுசாமி
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை, ஜன-9

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட கட்சி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி;-
அதிமுகவில் ஸ்லீப்பர் செல் என்பது இனிமேல் இல்லை. யார் வெளியே வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது என சசிகலாவை மறைமுகமாக சாடினார். மேலும், சட்டமன்றத்தேர்தலில் அதிமுக – திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும். ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி என்றார். அதிமுக கூட்டணியில் தேசிய கட்சியான பாஜக இருக்கும் நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.