சுஜித் உயிரிழப்பு : உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை.அக்டோபர்.29
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி சுஜித் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸ், கலாமேரி தம்பதியரின் இரண்டாவது குழந்தை சுஜித்வில்சன் சோளம் அறுவடை செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான். இரண்டரை வயது குழந்தை சுஜித், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள், 80 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் இரவு 2.30 மணியளவில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல், பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள இரண்டரை வயது குழந்தை சுஜித் பலியான விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸ், கலாமேரி தம்பதியரின் இரண்டாவது குழந்தை சுஜித்வில்சன் சோளம் அறுவடை செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான். இரண்டரை வயது குழந்தை சுஜித், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.குழந்தை குழிக்குள் விழுந்ததில் இருந்தே ஆட்சியர், அமைச்சர்கள் நடுக்காட்டுப்பட்டியிலேயே முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வந்தனர். ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள், 80 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் இரவு 2.30 மணியளவில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல், பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.