தமிழகத்தில் இன்று புதிதாக 790 பேருக்கு கொரோனா.. 8 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜன-8

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 24 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 897 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதன் மூலம் மொத்தம் 8,05,136 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,208 ஆக உயர்ந்துள்ளது.
  • அரசு மருத்துவமனையில் 5; தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 208 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • சென்னையில் மொத்தம் 2,27,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,46,95,106 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இன்று மட்டும் 64,231 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 7,432 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,98,518 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 479 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,26,224 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 311 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *