சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு..

சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, ஜன-8

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான ஒத்திகை 2ம் கட்டமாக தொடங்கியது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகையை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. ஏற்கனவே 5 மாவட்டங்களில் நடந்தநிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 இடங்களில் இன்று ஒத்திகை நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 20% பேருக்கு அதாவது 1.6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பு மருந்தை சேமிப்பதற்கு குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள், தடுப்பு மருந்தை தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளை சேமிக்க கட்டமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *