நாடு முழுவதும் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை..!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெறுகிறது.

சென்னை, ஜன-8

இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்தை அவசர கால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் அவசர கால தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இதற்காக கடந்த 2-ந்தேதி நாடு முழுவதும் 74 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெற்றது. தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை வெற்றிகரமாக அமைந்தது.

இதையடுத்து நாடு முழுவதும் இன்று தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெறுகிறது. மொத்தம் 736 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஒத்திகை நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்ட ஒத்திகையின்போது உத்தர பிரதேசம், அரியானா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றதால் இந்த முறை அந்த மாநிலங்களில் மட்டும் ஒத்திகை நடைபெறாது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. மொத்தம் 190 இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *