குருபெயர்ச்சி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சென்னை.அக்டோபர்.29

குரு பெயர்ச்சியையொட்டி  சென்னை  திருவல்லீஸ்வரர் கோயில் ஆலங்குடி, உள்ளிட்ட  ஆலயங்களில்  நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நவக்கோள்களின் ராஜா கிரகமான குரு, விருச்சிக ராசியிலிருந்து  தனுசு ராசிக்கு இன்று அதிகாலை 3.49 மணிக்கு பெயர்ச்சியானது.

 குருபார்வை கோடி நண்மை என்று ஜோதிடங்கள் கூற்றுபடி நற்பலன்களை தரகூடிய கிரகமான குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு இடம்பெயர்ச்சி ஆவது குரு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி குரு தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குருபகவானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. குருப்பெயர்ச்சியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 இதேபோல் குரு பகவான் வழிபட்ட தலமான சென்னை  திருவலிதாயத்தில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயிலில் சிறப்பு வேள்வியும் அதனைத் தொடர்ந்து குருபகவானுக்கு  அபிசேகமும் ஆராதனையும் நடைபெற்றது.   சிறப்பு அலங்காரத்தில்  தனிசன்னதியில் அருள்பாலித்த குருபகவானை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.அத்துடன் பரிகார பூஜைகளும் நடைபெற்றது.

இதேபோல் தஞ்சாவூர் அருகே உள்ள தெற்கு திட்டையில் உள்ள குருதலத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *