பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் காமராஜூக்கு கொரோனா..!
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, ஜன-6

தமிழகத்தில் கொரோனா தொற்று, தொடர் நடவடிக்கை காரணமாக வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தினமும் கொரோனா தொற்றால் 800 பேரிலிருந்து 900 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் உணவுத்துறை அமைச்சர் காமராஜும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2500 பரிசுப் பணத்தைக் கடந்த 4-ம் தேதியிலிருந்து அமைச்சர் காமராஜ் பொதுமக்களைச் சந்தித்து அளித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு அறிகுறியில்லாத கரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக நேற்றிரவு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் சிகிச்சைக்காகச் சென்றார். அவருக்கு அறிகுறியில்லாத கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.